இலங்கையில் சுமார் 75 இலட்சம் மக்கள் உணவு பாதுகாப்பற்ற நிலையை எதிர்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்த தகவல் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்புடன் இணைந்து அண்மையில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில மாகாணங்களில் சுமார் 88 வீதமான மக்கள் உணவு பாதுகாப்பற்ற நிலையை எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த நாட்டில் உணவுப் பாதுகாப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.