பாடசாலை மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து அதிபர்களுடன் கலந்துரையாடி வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். கிடைக்கப்பெற்றுள்ள பல்வேறு முறைப்பாடுகளுக்கு அமைய, இந்த கலந்துரையாடல் நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், மாகாண அதிகாரிகளுடன் வாரத்திற்கு ஒருமுறை தொலைக்காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக பல தெளிவூட்டல்களை வழங்க எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார். மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் எதிர்காலம் தொடர்பில், பெற்றோருக்கும் முக்கிய பொறுப்பு உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
Author: admin
இலங்கையைச் சேர்ந்த புகழ்பெற்ற பந்துவீச்சாளரான லசித் மலிங்க, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றிகரமாக திரும்புவதற்கு தயாராக உள்ளார், ஆனால் இந்த முறை பயிற்சியாளராக இருக்கிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மேஜர் லீக்கில் போட்டியிடும் உரிமையாளரின் புதிய அணியான மும்பை இந்தியன்ஸ் நியூயார்க், மலிங்கவை தங்கள் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது. இந்த அறிவிப்பு மும்பை இந்தியன்ஸ் நியூயார்க்கின் நட்சத்திரம் நிறைந்த அணி மற்றும் வரவிருக்கும் போட்டிக்கான முழு பயிற்சி ஊழியர்களையும் வெளியிடுகிறது, டைனமிக் கீரன் பொல்லார்ட் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.
வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து பல காரணிகளை கவனமாக பரிசீலித்த பின்னரே தீர்மானிக்க வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பாக தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் சமீபத்திய கூட்டத்தின் போது முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் பல காரணிகளை கருத்திற்கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக சுமார் 4,000 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். எவ்வாறாயினும், 3,000 க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இலங்கை மின்சார சபையை தனியார் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக, நாடு முழுவதும் பாரிய தொழில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மின்சார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் புதிய சட்டமூலங்களை கொண்டு வந்து மின்சார சபையை தனியார் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கான அனைத்து திட்டங்களையும் அரசாங்கம் ஏற்கனவே தயார் செய்துள்ளதாக மின்சார ஊழியர் சங்க பொது செயலாளர் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நேற்று (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 1969 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க இலங்கை மின்சார சபைச் சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் புதிய சட்டமொன்றை பாராளுமன்றத்தில் கொண்டு வருவதற்கு தயாராகியுள்ளதாகவும் புதிய சட்டத்தின் உள்ளடக்கம் குறித்து எழுத்துமூலமான அறிக்கையை வெளியிடவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, 3,800க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற ஊழியர்களை பெரும் செலவில் பணிநீக்கம் செய்ய வேண்டியிருக்கும்…
இனங்களுக்கு இடையே, நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமாக கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒகஸ்ட் மூன்றாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. அரச தரப்பு சாட்சியாளராக அவர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் சாட்சியம் அளிக்க இருந்தார். எனினும், கலகொட அத்தே ஞானசார தேரர் சுகயீனம் காரமான நீதிமன்றில் ஆஜராகவில்லை. இந்த நிலையில் வழக்கு எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் மூன்றாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மானியங்களை இழந்தவர்கள் மேன்முறையீடுகளை தாக்கல் செய்ய முடியும் என ஜனாதிபதி செயலணியின் தலைவர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் புதிய மானியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே சாகல ரத்நாயக்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். “ஏழை மக்களின் ஏழ்மையை போக்க செழுமை என்பது காலம் காலமாக இருந்து வருகிறது. ஆனால் அது நடந்ததா? அது நடக்கவில்லை. ஏழைகள் அதிலிருந்து வாழ முடியாது. அதிலிருந்து மீள முடியாது. சரி செய்யப்படும். மீண்டும், அதை பெறுபவர்களை சரியாக அடையாளம் காண, சமீபத்தில் ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, 100% மக்கள் தொகை கணக்கெடுப்பில் இது சரி செய்யப்படாது, ஆனால் நான் செழிப்புக்கு தகுதியானவர் என்று நினைக்கும் ஒருவர் எந்த நேரத்திலும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். அநியாயம் நடந்ததாக நீங்கள் நினைத்தால், அதை சரி செய்ய இதுவே வாய்ப்பு.…
தற்போதுள்ள தொழிலாளர் சட்டத்தின் குறைபாடுகளை திருத்தும் வகையில் புதிய தொழிலாளர் சட்ட சட்டமூலத்தை தொழிலாளர் ஆலோசனை சபையில் விரைவில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். சட்டமூலத்திற்கான பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரேரணையின் பிரகாரம், தொழிலாளர் அமைச்சில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் மனுஷ நாணயக்கார பின்வரும் கருத்துக்களை வெளியிட்டார். “ஆட்சேர்ப்பு அல்லது பணியிடத்தில் ஒரு பணியாளருக்கு எதிரான பாகுபாட்டைத் தடுக்க சட்ட விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பணிச்சூழல்கள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பான நிர்வாக கவுன்சில் ஆணை மற்றும் கடைகள் மற்றும் அலுவலகங்கள் சட்டத்தின் விதிகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் அகற்றப்பட்டு, ஒவ்வொரு பணியாளருக்கும் சமமான ஒதுக்கீடுகள் செய்யப்படும். பணியிடத்தில் அனைத்து துன்புறுத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு தீர்வு காண சட்ட விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பின்னர் ஊழியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப 5 நாள் வாரம் மற்றும் நெகிழ்வான வேலை நேரம் அறிமுகப்படுத்தப்படுகிறது. பகுதி…
ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக (20 வருடங்கள்) தலைமறைவாக இருந்த மரண தண்டனை விதிக்கப்பட்ட 54 வயதான நபர் ஒருவர் ராகமவில் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் மற்றும் அவரது சகோதரருமாக இருவரும் நபர் ஒருவரை கடந்த 2001 ஆம் ஆண்டு கூரிய ஆயுதங்களால் தாக்கி, அவரை அடித்துக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து இரண்டு சகோதரர்களும் விளக்கமறியலில் இருந்தனர், 2004 சுனாமியைத் தொடர்ந்து, அவர்கள் நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து வேறு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர். அவ்வாறு அவர்கள் வேறு சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான தற்போது கைது செய்யப்பட்டவர் தப்பித்து தப்பிச் சென்றார். இந்நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபர் 2012 இல் விடுவிக்கப்பட்ட நிலையில், தப்பியோடியவருக்கு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது. மரணதண்டனை விதிக்கப்பட்டவர் தலைமறைவாக இருந்து நிலையில், சுமார் இரண்டு தசாப்தங்களின் பின்னர் நேற்று புதன்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று வியாழக்கிழமை (15) அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக…
பொசன் போயா தினத்தன்று மதுபான தன்சல் நடாத்தியதை காட்டும் காணொளியை Tik Tok செயலியில் பதிவிட்ட 06 இளைஞர்கள் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். புகையிலை மற்றும் மதுவை விளம்பரப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த காணொளி சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, பொலிஸ் மா அதிபர் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் விசாரணைகளை ஒப்படைத்துள்ளார். அதற்கமைய, கட்டுநாயக்கவில் வசிக்கும் 20 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட 06 இளைஞர்கள் நேற்று குறித்த பிரிவுக்கு அழைக்கப்பட்டு, சம்பவம் தொடர்பில் விரிவான வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அங்கு தங்கள் உறவினர் கொண்டு வந்த வெளிநாட்டு மதுபான போத்தல்களில் தேனீரை ஊற்றி Tik Tok செயலிக்கு வீடியோ எடுப்பதற்காக இவ்வாறான செயலை செய்ததாக தெரிவித்தனர். எவ்வாறாயினும் புகையிலை மற்றும் மதுபான சட்டத்தின் கீழ் மதுபானத்தை விளம்பரப்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் 6 பேரையும் கைது செய்த புலனாய்வு அதிகாரிகள்…
2021 ஆம் ஆண்டு கெரவலப்பிட்டியவில் 15 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான 200 மில்லியன் சிகரெட்டுகள் அழிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், குறித்த நடவடிக்கையால் அரசாங்கத்திற்கு 13 பில்லியன் ரூபா சேமிக்கப்பட்டமைக்கு சுங்கத் திணைக்களத்தினருக்கு நன்றி தெரிவித்தார். இந்நிலையில், இவற்றை யாரும் விற்க முடியாதா? என கேள்வி எழுப்பலாம். இவற்றை விற்க முடியாது. இவற்றின் தரத்திற்கு எந்தப் பொறுப்பும் கூறமுடியாது. சிகரெட் முற்றிலும் நிறம் மாறிவிட்டன. அதகால் இந்த சிகரெட் தொகையினை இன்று அழிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டோம் எனவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.