2021 ஆம் ஆண்டு கெரவலப்பிட்டியவில் 15 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான 200 மில்லியன் சிகரெட்டுகள் அழிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், குறித்த நடவடிக்கையால் அரசாங்கத்திற்கு 13 பில்லியன் ரூபா சேமிக்கப்பட்டமைக்கு சுங்கத் திணைக்களத்தினருக்கு நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில், இவற்றை யாரும் விற்க முடியாதா? என கேள்வி எழுப்பலாம். இவற்றை விற்க முடியாது. இவற்றின் தரத்திற்கு எந்தப் பொறுப்பும் கூறமுடியாது. சிகரெட் முற்றிலும் நிறம் மாறிவிட்டன.
அதகால் இந்த சிகரெட் தொகையினை இன்று அழிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டோம் எனவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.