# இலங்கை வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பிச் சென்றமை தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. முதற்கட்ட விசாரணைகளை கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை அத்தியட்சகர் மேற்கொண்டுள்ளார். இதன்படி பல அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை புலனாய்வு பிரிவினரால் மற்றுமொரு விசாரணை நடத்தப்பட்டது. இது தவிர, தப்பிச் சென்று பிடிபட்ட கைதியின் வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளதாகவும் கைதி தொடர்பான ஆவணங்கள் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரின் சீருடையை கைதி அணிந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) காலை வெலிக்கடை சிறைச்சாலையின் பிரதான நுழைவாயில் ஊடாக தப்பிச் சென்றுள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். எனினும் சிறைச்சாலை அதிகாரிகள் குழுவினால் கைதி மருதானை ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
Author: admin
உள்ளுர் சந்தையில் தேவைக்கு ஏற்ப மரக்கறிகள் வரத்து இன்மையால் மரக்கறிகளின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக ஹட்டன் பிரதேச மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, ஒரு கிலோ பச்சை மிளகாய் 1000 ரூபாயாகவும், கறி மிளகாய் 580 ரூபாயாகவும், போஞ்சி 600 ரூபாயாகவும், கரட் 530 ரூபாயாகவும், வெண்டைக்காய் 320 ரூபாயாகவும், பீட்ரூட் 480 ரூபாயாகவும், தக்காளி 240 ரூபாயாகவும், சில்லறை விலையில் விற்கப்படுகிறது. ஹட்டன் பிரதேசத்தில் மரக்கறிகளின் விலை வேகமாக அதிகரித்துள்ளமையினால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். இதேவேளை யாழ்ப்பாணத்திலும் பச்சைமிளகாய் விலை 1000 ரூபாவை தாண்டியுள்ளதுடன், சில வர்த்தக நிலையங்களில் பச்சை மிளகாய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை சந்தேக நபராக ஆஜராகுமாறு அறிவித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த அழைப்பாணையை வலுவற்றதாக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆா்ப்பாட்டகார்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த போது ஒரு கோடியே எழுபத்தெட்டு இலட்சம் ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டமை தொடா்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவா் சந்தேகநபராக பெயாிடப்பட்டிருந்தாா். அதற்கு எதிராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவா், நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதேவேளை, கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி காலிமுகத்திடம் பகுதியில் இடம்பெற்ற “கோதா கோ கிராமம்” போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பில் தேசபந்து தென்னகோனை சந்தேக நபராக பெயரிடுமாறு சட்டமா அதிபர் வெளியிட்ட…
எரிவாயு சிலிண்டரின் விலையை மீண்டும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் விலைகள் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இம்மாதம் 04ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 12.5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 452 ரூபாயால் குறைக்கப்பட்டு அதன்படி புதிய விலை 3,186 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இது தவிர 05 கிலோ எரிவாயுவின் விலை 181 ரூபாயால் குறைக்கப்பட்டு 1281 ரூபாயாகவும் 2.3 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 83 ரூபாயால் குறைக்கப்பட்டு 598 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, அடுத்த மாதம் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டால், பொருளாதார நெருக்கடியின் பின்னர் தொடர்ந்து நான்காவது முறையாக எரிவாயு விலை குறைக்கப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
இளம் பெண்களை ஏமாற்றி அவர்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து மிரட்டி பணம் பறித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். முகநூல் ஊடாக இளம் பெண்களை அடையாளம் கண்டுகொண்ட சந்தேக நபர் அவர்களுடன் காதல் உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். பின்னர், அவா்களை ஹோட்டல் அறைகளுக்கு அழைத்துச் சென்று நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனா் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காண்பித்து சம்பந்தப்பட்ட இளம் பெண்களை பயமுறுத்தி, தாம் கேட்ட பணத்தை தராவிட்டால் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இவ்வாறு, அவிசாவளை பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய யுவதி ஒருவருடன் காதல் உறவை வளர்த்துக் கொண்ட குறித்த சந்தேக நபர், அந்த யுவதியின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளார்.…
அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – இரத்தினபுரி வீதியில் உக்வத்தை மயானத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். அவிசாவளை திசையில் இருந்து ஹங்வெல்ல திசை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸில் பயணித்த குறித்த யுவதி, பஸ்ஸிலிருந்து இறங்கி முன்னோக்கிச் சென்றுகொண்டிருந்த போது, அதே பஸ்ஸில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த யுவதி அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அவிசாவளை, புவக்பிட்டிய, பிரகதிபுர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய தினக்ஷி தில்ஷிகா என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் மஹரகமவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவர் என தெரியவந்துள்ளது. பஸ்ஸின் இடது பக்கம் யுவதி மீது மோதுண்ட நிலையில், அவர் தரையில் விழுந்துள்ளாா்.இதனை அவதானிக்காது செலுத்தப்பட்ட பஸ்ஸின் முன் சக்கரம் மற்றும் பின் சக்கரமும் அவா் மீது ஏறி படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர், சாரதி பஸ்ஸை நிறுத்தாது செலுத்திய நிலையில், அதனை பின்தொடா்ந்து…
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பிற கடைகளுக்கு விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், வெளியில் விற்கும் பேக்கரிகளுக்கு முட்டை வழங்குவது உடனடியாக நிறுத்தப்படும் என்றும் ராஜ்ய வர்த்தக பல்வேறு சட்டப்பூர்வ நிறுவனங்களின் தலைவர் ஆசிரி வாலிசுந்தர தெரிவித்துள்ளார். பேக்கரி உரிமையாளர் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஒரு தொகுதி முட்டையை அவரது சகோதரரின் கடையில் விற்பனைக்கு வழங்கியதன் காரணமாக பேக்கரி உரிமையாளர் ஒருவருக்கு முட்டை வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான மற்றொரு காரணம் உள்ளூர் முட்டை விலையை குறைப்பதாகவும், உள்ளூர் முட்டைகளின் தட்டுப்பாடு நீங்கி விலை சீராகும் வரை இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்யப்படும் என்றும் ஆசிரி வாலிசுந்தர தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய தலைவர், தினமும் பத்து இலட்சம் முட்டைகள் தொடர்ச்சியாக இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவித்தார்.
கடந்த ஐந்து மாதங்களில் மாத்திரம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறுபது மில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளதாககூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்தார். இதன் மூலம் கிடைக்கும் இலாபத்தை எதிர்காலத்தில் மக்களுக்கு வழங்கும் வகையில் கழகம் செயற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்காலத்தில் எரிபொருளின் விலையை குறைக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் கூறினார். இந்த இலாபத்தை பெறுவதற்கு முக்கிய காரணம் மாநகராட்சியில் திறமையின்மை மற்றும் முறைகேடுகளை தவிர்க்கும் திறனே காரணம் என நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்.
கஞ்சாவை ஏற்றுமதி செய்து பாாிய பொருளாதார நன்மைகளைப் பெறலாம் என்று வௌியிடப்படும் கருத்துக்களில் எந்தவித உண்மை இல்லை என்று மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கஞ்சா பாவனையை சட்டப்பூர்வமாக்குவதற்கு தற்போது பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கஞ்சாவை ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? என ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மையம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், முதலீட்டுச் சபையின் செயற்திட்டமாக இதற்கு அனுமதி வழங்கப்படுமென விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அண்மையில் அறிவித்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கஞ்சா ஏற்றுமதி மூலம் பொருளாதார நன்மைகள் இருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்பது கஞ்சா நிறுவனங்களின் கணக்குப் பதிவேடுகளின் தணிக்கையில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. இன்றைய உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அறிக்கையொன்றை வெளியிட்டு அந்த நிறுவனம் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளது. கஞ்சாவை ஊக்குவிக்கும் நம்பிக்கையில் உள்ள தரப்பினர் தற்போது இந்நாட்டு மக்கள் எதிர்நோக்கி…
நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் இப்போது அரிசி போதிய கையிருப்பு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. விலை அதிகரிக்கும் போது அதனை கட்டுப்படுத்த சந்தைக்கு அரிசியை விநியோகிக்கும் வகையில் கையிருப்புக்களை பராமரிப்பதற்காக விவசாய அமைச்சு ஏற்கனவே திறைசேரியிடம் நிதிக்கோரிக்கையை முன்வைத்த போதும், அது ஐந்தாவது முறையாக நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே நெல் சந்தைப்படுத்தும் சபையிடம் போதுமான அரிசி கையிருப்பை கொண்டிருக்க முடியவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சபைக்கு திருப்தியான கையிருப்பை பேணுவதற்கு 6 பில்லியன் ரூபாய்கள் தேவை. என்றபோது உடனடி நிலைமையை சமாளிக்க 2 பில்லியன்களை அமைச்சு கோரிய போதும், திறைசேரி வெறும் 250 மில்லியன் ரூபாய்க்கு மட்டுமே ஒப்புதல் அளித்துள்ளது என்று அமைச்சின் செயலாளரை கோடிட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே நெல் சந்தைப்படுத்தும் சபை, கையிருப்புக்களை பராமரிப்பதற்காக இரண்டு அரச வங்கிகளிடம் இருந்து பெற்ற 21 பில்லியன் ரூபாய்களை இன்னும் திருப்பிச் செலுத்தவில்லை என்று மத்திய வங்கியின் அதிகாரி…