உள்ளுர் சந்தையில் தேவைக்கு ஏற்ப மரக்கறிகள் வரத்து இன்மையால் மரக்கறிகளின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக ஹட்டன் பிரதேச மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, ஒரு கிலோ பச்சை மிளகாய் 1000 ரூபாயாகவும், கறி மிளகாய் 580 ரூபாயாகவும், போஞ்சி 600 ரூபாயாகவும், கரட் 530 ரூபாயாகவும், வெண்டைக்காய் 320 ரூபாயாகவும், பீட்ரூட் 480 ரூபாயாகவும், தக்காளி 240 ரூபாயாகவும், சில்லறை விலையில் விற்கப்படுகிறது.
ஹட்டன் பிரதேசத்தில் மரக்கறிகளின் விலை வேகமாக அதிகரித்துள்ளமையினால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை யாழ்ப்பாணத்திலும் பச்சைமிளகாய் விலை 1000 ரூபாவை தாண்டியுள்ளதுடன், சில வர்த்தக நிலையங்களில் பச்சை மிளகாய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.