மத்திய ரஷ்யாவில் உள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் இருபது பேர் காயமடைந்துள்ளனர் என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் மாணவர்களும் இஷெவ்ஸ்க் நகரில் உள்ள பாடசாலையில் ஒரு பாதுகாவலரும் உள்ளடங்குவதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஏறக்குறைய 1,000 மாணவர்களும் சுமார் 80 ஆசிரியர்களும் உள்ள பாடசாலை எண் 88 இல் இந்த சம்பவம் நடந்தது. துப்பாக்கி ஏந்திய நபர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டதாகவும் அதன் நோக்கம் தெளிவாக இல்லை என்றும் கூறப்படுகிறது. அவசர அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர். துப்பாக்கிச் சூடு நடந்த பாடசாலைக்குள் படமாக்கப்பட்ட காணொளிகளை ரஷ்ய ஊடகங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளன. ஒரு காணொளியில் தரையில் இரத்தம் மற்றும் ஒரு ஜன்னலில் ஒரு தோட்டா துளை காட்டுவது போல் தோன்றுகிறது, சிறுவர்கள் மேசைகளுக்கு கீழே குனிந்து கிடக்கிறார்கள். தாஸ் செய்தி நிறுவனத்தால் மேற்கோள் காட்டப்பட்ட மாநில நாடாளுமன்ற…
Author: admin
பக்கத்து வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை புகையிரத்தில் மோத விடாமல் தடுக்க முயன்ற 45 வயதுடைய பெண் ஒருவர் குறித்த புகையிரத்தில் மோதி பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். பொலன்னறுவை, கதுருவெல பகுதியை சேர்ந்த வீரதுங்க ஆராச்சி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த விபத்து கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த அவர் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளைச்சாவு அடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர், நோயாளியின் உடல் உறுப்புகளான சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றை தானமாக அளித்து மேலும் 3 பேரின் உயிரைக் காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். அதன்படி, இவரின் சிறுநீரகம் மற்றும் கல்லீரலை தானமாக வழங்க குடும்பத்தினர் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்தியாவின் ஹிமாச்சல பகுதியில் ஏற்ப்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகள் பயணித்தே வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் காயமடைந்த 10 பேரும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது. அத்துடன் குறித்த பகுதியில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாகவே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழன் இன்று பூமிக்கு அருகே வரவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது போன்ற நிகழ்வு ஏற்கனவே கடந்த 1963ம் ஆண்டு நடந்துள்ளது. தற்போது 59 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே போன்றதொரு நிகழ்வு இன்று வானில் நிகழ உள்ளது. இந்நிகழ்வை பெரிய தொலைநோக்கி மூலமாக பார்க்கலாம் என்று அமெரிக்க வின்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த அரிய நிகழ்வை காண பலரும் ஆவலுடன் காத்துள்ளனர். மேலும், இந்த நிகழ்வின் போது வியாழனை சுற்றி வரும் 4 துணைக்கோள்களையும் பார்க்க முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் கூடுதல் தகவல்களையும் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மனைவியான அயோமா ராஜபக்ஷவிடம் கப்பம் கோரிய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொலன்னாவ – சாலமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், முன்னாள் முதற் பெண்மணி அயோமா ராஜபக்ஷவுக்கு தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, அவரிடம் 10 இலட்சம் ரூபாவை கப்பமாக கோரியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் தங்க ஆபரணங்களை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். டுபாய் நகரில் இருந்து ஓமான், மஸ்கட் ஊடாக விமானத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த பிக்குவின் பயணப் பொதியில் இருந்து குறித்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர். சுமார் 225 இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள், மடிக்கணினிகள், தங்க பிஸ்கட்கள் மற்றும் தங்கத் கட்டிகள் போன்றவற்றை சந்தேகநபர் நாட்டுக்கு கொண்டு வந்துள்ளார். திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வரும் பிக்கு 23 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து சந்தேகநபருக்கு அபராதம் விதித்த பின்னர் விடுவிக்க சுங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
க.பொ.த சாதாரண தரம் சித்தியடைந்து உயர்தரத்துக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, 99 கல்வி வலயங்களைச் சேர்ந்த 2,970 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள 99 கல்வி வலய அலுவலகங்களில் இருந்து தலா 30 புலமைப்பரிசில் வெற்றியாளர்களை தெரிவு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட புலமைப்பரிசில் வெற்றியாளர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் வரை அதிகபட்சமாக 24 மாதங்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.5,000/- உதவித்தொகையாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகி க.பொ.த உயர்தர வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளதுடன், புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் பத்திரிகை விளம்பரங்கள் மூலம் கோரப்படும். இதன்படி, இந்தப் பொறிமுறை தொடர்பில் அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு உடனடியாக அறிவிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க…
அதிவேகமாக பயணித்த கெப் வாகனமொன்று எதிர்திசையில் இருந்து வந்த முச்சக்கரவண்டி மற்றும் காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (25) மாலை 6.30 மணியளவில் கினிகத்தேன பிரதான வீதியில் கினிகத்தேன அம்பகமுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் காரில் பயணித்த இருவர் மற்றும் கெப் வாகனத்தின் சாரதி படுகாயமடைந்து நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கினிகத்தேனையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி அதிக வேகத்துடன் பயணித்த கெப் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, நாவலப்பிட்டியிலிருந்து கினிகத்தேனை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி மற்றும் காருடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, முச்சக்கர வண்டியும் கெப் வாகனமும் வயலில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தின் பின்னர், கெப் வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்று நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதுடன், காயமடைந்தவர்கள் அம்பகமுவ பிரதேசவாசிகளுடன் சேர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.…
மத ஸ்தலங்களில் மின்சார கட்டண பிரச்சினை தொடர்பில் மின்சார சபை மற்றும் புத்தசாசன அமைச்சுக்கு இடையில் இன்று (26) கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. புதிய மின் கட்டண திருத்தத்துடன் மத ஸ்தலங்களில் மின் கட்டணம் உயர்வடைந்தமை தொடர்பில் புத்தசாசன அமைச்சுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த கலந்துரையாடல் இடம்பெறுவதாக அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
வானுயர்ந்த கோபுரங்களை நிர்மாணம் செய்வதனால் நாடு அபிவிருத்தி அடைந்து விட்டதாக கூற முடியாது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துமாறு கதிர்னால் தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரியுள்ளார். ஜனநாயக ரீதியில் மக்களுக்கு அரசாங்கத்தின் மீது எதிர்ப்பை காண்பிக்க அது சந்தர்ப்பமாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று இலங்கையில் ஒருவர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவராக இருந்திருந்தால் அவர் தற்பொழுது வறியவராக மாறியுள்ளார். பெரிய பாதைகளை அமைத்து உலகிற்கு பெரிதாக காட்டினாலும், பெரிய கோபுரங்களை அமைத்து, பெரிய விமான நிலயங்கள் அமைத்து பிரச்சாரம் செய்தாலும், அந்த விமான நிலையத்தில் ஒரு விமானமும் தரையிறங்குவதில்லை. இலங்கையில் பலர் இன்று உண்ண உணவின்றி தவிக்கின்றனர். சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய முயற்சிக்கின்றனர். நத்தார் காலத்தில் கொழும்பை அழகாக சோடிப்பார்கள். எனினும் சாப்பிட எதுமில்லாத அழகிய நகரமாகவே இருக்கும். தலைவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றார்கள்.…