சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழன் இன்று பூமிக்கு அருகே வரவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற நிகழ்வு ஏற்கனவே கடந்த 1963ம் ஆண்டு நடந்துள்ளது. தற்போது 59 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே போன்றதொரு நிகழ்வு இன்று வானில் நிகழ உள்ளது.
இந்நிகழ்வை பெரிய தொலைநோக்கி மூலமாக பார்க்கலாம் என்று அமெரிக்க வின்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து இந்த அரிய நிகழ்வை காண பலரும் ஆவலுடன் காத்துள்ளனர்.
மேலும், இந்த நிகழ்வின் போது வியாழனை சுற்றி வரும் 4 துணைக்கோள்களையும் பார்க்க முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் கூடுதல் தகவல்களையும் தெரிவித்துள்ளனர்.