ஆகஸ்ட் 1969 இல் ஆரம்பிக்கப்பட்ட சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பல தசாப்தங்களாக இலங்கையின் மண்ணெண்ணெய் தேவையை பூர்த்தி செய்தது.
எனினும், நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் இயங்கவில்லை.
மண்ணெண்ணெய் சுத்திகரிக்கப்படாததால், அதற்கு பதிலாக விமான எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்குவதற்குப் பதிலாக கண்ணீர் புகை, ஆப்பிள், திராட்சை மற்றும் தண்ணீர் போத்தல்களுக்கு தேவையில்லாமல் செலவு செய்து வருவதாக சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் உபகரணப் பொறியியலாளர் ஜனக விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
சுத்திகரிப்பு நிலையத்தை உடனடியாக திறக்குமாறு கோரி சுத்திகரிப்பு நிலைய ஊழியர்கள் இன்று (26) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், சுத்திகரிப்பு நிலையத்தின் உபகரணங்களும் அழிக்கப்படுவதாக சுட்டிக்காட்டினர்.