சம்பளம் தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக அரச ஊழியர்கள் வீதியில் இறங்கி வருகின்றனர்.
இன்று (26) பிற்பகல் வைத்தியர்கள், ஆசிரியர்கள் உட்பட பல தொழில்சார்ந்தவர்கள் எதிர்ப்பு மற்றும் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் பொரளையில் உள்ள அரச அச்சகத்தில் அதிகாரிகளின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக அரசாங்க அச்சக திணைக்களத்தின் தொழிற்சங்க உறுப்பினர் அசங்க சந்தருவன் தெரிவித்துள்ளார்.
“வங்கிகள் கடனுக்காக செலுத்த வேண்டிய பணத்தை எடுத்துக் கொள்ளும்போது, எங்களுக்கு பிழைக்க சிறிது மிச்சம்,” என்று அவர் கூறினார்.
இதேவேளை, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (26) காலை முதல் அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.
இன்று (26) காலை 8 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை வைத்தியர்கள் தமது கடமைகளில் இருந்து விலகியுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.
அடிப்படை சம்பளத்திற்கு மேல் மேலதிக நேர கொடுப்பனவு வழங்கப்பட மாட்டாது என திறைசேரி விடுத்துள்ள சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வைத்தியர்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.