தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் பலர் தொழில் வாய்ப்புக்களை இழக்க வேண்டியேற்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் பலருக்கு வறுமை ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களை வழமையான முறையில் தொடர முடியாமைக் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் 6 மாதக் காலப்பகுதிக்குள் பணவீக்கத்தை எவராலும் 30 சதவீதத்திற்கு கீழ் கொண்டுவர முடியாது.
அரசாங்கம் சலுகை வழங்காத விடத்து சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கு முடியாது போகும்.
இதனால் பலர் தமது தொழில் வாய்ப்புக்களை இழக்க வேண்டியேற்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.