எரிபொருள் விலையேற்றத்திற்கு ஏற்ப நெடுஞ்சாலைகளில் இயங்கும் சொகுசு பஸ்களின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) இன்று அறிவித்துள்ளது.
சொகுசு நெடுஞ்சாலை பேருந்துகளின் கட்டணம் 19.49% அதிகரித்துள்ளது என்று NTC தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று பிற்பகல் 01.00 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக NTC மேலும் தெரிவித்துள்ளது.
*திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு:*
*கொழும்பு – மாத்தறை: ரூ. 1,210 கடவத்தை – காலி : ரூ. 1,000*
*கொழும்பு – எம்பிலிப்பிட்டிய: ரூ. 1,680*
*கொழும்பு – வீரகெட்டிய : ரூ. 1,550*
*கொழும்பு – மொனராகலை : ரூ. 2, 420*
*மகும்புர – அக்கரைப்பற்று : ரூ. 3,100*