கொழும்பு – காங்கேசந்துறை இடையிலான புகையிரத பாதையின் சமிக்ஞை அமைப்பை நவீனமயமாக்குவதற்கு, இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் ரூ. 450 கோடிகள் ($15 மில்லியன்) அங்கீகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அநுராதபுரத்தில் இருந்து புகையிரத பாதையை நவீனமயப்படுத்துவது தொடர்பாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுடன் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன நடத்திய கலந்துரையாடலின் பலனாக இந்த தொகை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அநுராதபுரத்திலிருந்து மஹவ வரையிலான இந்த ரயில் பாதையின் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும், இரண்டு மாதங்களில் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.