மன்னாரிலிருந்து காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
# பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்
• அனுராதபுரம் – பி.ப. 4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.
• மட்டக்களப்பு – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.
• கொழும்பு – அடிக்கடி மழை பெய்யும்.
• காலி – அடிக்கடி மழை பெய்யும்.
• யாழ்ப்பாணம் – அடிக்கடி மழை பெய்யும்.
• கண்டி – சிறிதளவில் மழை பெய்யும்.
• நுவரெலியா – சிறிதளவில் மழை பெய்யும்.
• இரத்தினபுரி – அடிக்கடி மழை பெய்யும்.
• திருகோணமலை – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழைஅல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.
• மன்னார் – அடிக்கடி மழை பெய்யும்.
(வளிமண்டலவியல் திணைக்களம்)