தனது பதினொரு வயது சொந்த மகளுக்கு கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியான மகளின் தந்தைக்கு 110 வருட கடூழிய கடூழிய சிறைத் தண்டனையும் ஆறு இலட்சம் நட்டஈடு வழங்கவும் பலப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி திரு.ரங்க திஸாநாயக்க இன்று (5) உத்தரவிட்டுள்ளார்.
ஊரகஸ்மன்ஹந்திய – கோரக்கீனையைச் சேர்ந்த சித்த மரக்கல பாலித டி சில்வா என்ற கேவலமான தந்தைக்கே இந்த சிறைத்தண்டனையும் , நட்டஈடு மற்றும் அபராதம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டது.
2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இந்த சந்தேகநபரான தந்தை தனது மகளை பல சந்தர்ப்பங்களில் பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார் என உரகஸ்மஹந்திய பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் நீதிமன்றில் உண்மைகளை தெரிவித்தது.
அந்த வழக்குகள் ஒவ்வொன்றிலும், சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபட்டது.
தண்டனை வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி, அவர் தனது மகளை கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் எனவும் அத் தந்தைக்கு சிறைத்தண்டனை, இழப்பீடு மற்றும் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டார்.
இது தொடர்பில் ஊரகஹா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், தாய் வெளிநாட்டில் இருக்கும் போது, தந்தை தினமும் குடித்துவிட்டு வருவதாக அயல் வீட்டு வயோதிப பெண்ணுக்கு அறிவித்ததன் பேரில், ஊர்கஸ்மன்ஹந்திய காவற்துறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் சந்தேகநபரான தந்தையை விசாரணைக்காக கைது செய்துள்ளது.
பலப்பிட்டிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.