கடந்த வாரம் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (ஜூன் 05) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகராக சிறிதளவு உயர்ந்துள்ளது.
மக்கள் வங்கி ; அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 285.14 ரூபாவிலிருந்து 284.17 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 300.48 ரூபாவிலிருந்து 299.45 ரூபாவாக குறைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கி ; அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 285.81 ரூபாவிலிருந்து 283.83 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 300 ரூபாவிலிருந்து 298 ரூபாவாக குறைந்துள்ளது.
சம்பத் வங்கி ; அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 286 ரூபாவிலிருந்து 285 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 298 ரூபாவிலிருந்து 297 ரூபாவாக குறைந்துள்ளது.