சிறிலங்கா அபிவிருத்தி பத்திரங்கள் 2001 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதன் மூலம் சிறிலங்காவின் வெளிநாட்டு வர்த்தகக் கடன்கள் ஆரம்பமாகி 1,720 மில்லியன் டொலர்களை கடனாகப் பெற்றுள்ளன.
2022ஆம் ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்த அறிக்கையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் 2007ஆம் ஆண்டு முதல் சர்வதேச இறையாண்மை பத்திரங்களை வழங்கி மேலும் 1,760 மில்லியன் டொலர்கள் வர்த்தகக் கடன்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அத்தோடு, 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ரணில் விக்ரமசிங்க, சிறிலங்காவின் வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பான தகவல்களை விசாரிக்க சர்வதேசத்தின் ஆதரவைப் பெற வேண்டும் என வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், அவர் பெரும் கடனை மறைத்ததாக சொல்லி அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
மத்திய வங்கியால் வழங்கப்பட்ட வெளிநாட்டு வர்த்தகக் கடன்கள் தொடர்பான தகவல்களின்படி, 2001 முதல் 1,720 மில்லியன் டொலர் வளர்ச்சிப் பத்திரங்கள் மற்றும் 2007 முதல் 1,760 டிரில்லியன் சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் மூலமாக மட்டும் 3,480 கோடி டொலர் வணிகக் கடன் பெறப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தற்போது அதிபர் ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற்ற கடனுதவி 5 வீதத்திற்கும் அதிகமான வட்டி விகிதத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் பிரேமச்சந்திர அத்துகோரள சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்த வட்டி விகிதங்கள் மேலும் அதிகரிக்கலாம் என்பதும், சிறிலங்காவிற்கு கடன் வழங்கும் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற நிதி நிறுவனங்கள் நிதிக்கு ஏற்ப அதிக வட்டி விகிதங்களை நிர்ணயித்து வருவதும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த செயற்பாட்டின் காரணமாக இலங்கை கடனை மீள் செலுத்த முடியாமல் கடன் பொறிக்குள் சிக்குமா என பரவலாக பேசப்பட்டு வருகிறது.