05 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் போஷாக்கு நிலையை சரிபார்க்க நாடு தழுவிய அளவில் கணக்கெடுப்பு ஆரபிக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் குழந்தைகளின் உயரம் மற்றும் எடை என்பன பரிசோதிக்கப்படுவதாக குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா குறிப்பிட்டார்.
குடும்ப சுகாதார அதிகாரிகளால் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு கணக்கெடுப்பில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 15.3% எடை குறைந்த குழந்தைகள் என கண்டறியப்பட்டது.