மேல் மாகாணத்தில் பன்றிகளுக்கு பரவும் வைரஸ் நோய் தொடர்பில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெளிவுபடுத்திவுள்ளது.
இது தொற்றுநோய் அளவை எட்டவில்லை என சுகாதார திணைக்களம் பொதுமக்களுக்கு உறுதியளிக்கிறது.
தேவையற்ற பீதி தேவையில்லை எனவும், அமைதி காக்குமாறு திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹேமலி கொத்தலாவல, வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த வைரஸ் நோய் மனிதர்களுக்கு பரவும் அபாயம் இல்லை எனவும்அவர் பொதுமக்களுக்கு மேலும் உறுதியளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பன்றி இனத்தின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தில் மாத்திரமே கவனம் செலுத்தப்படுகிறது.
டிஆர்ஆர்எஸ் எனப்படும் வைரஸ் நோய், பன்றிகளின் சுவாச மண்டலத்தை முதன்மையாக பாதிக்கிறது. இது ஒரு குறிப்பிடத்தக்க கவலையாக இருந்தாலும், வைரஸை திறம்பட எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.