நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியினால் யூரியா உரத்தின் விலையானது பாரியளவில் அதிகரித்து, பின்னர் மீண்டும் குறைய ஆரம்பித்துள்ளது.
தற்பொழுது, இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் சர்வதேச சந்தையில் யூரியாவின் விலை வீழ்ச்சி காரணமாக யூரியா உரத்தின் விலை மேலும் குறைய ஆரம்பித்துள்ளது.
குறித்த விடயத்தை விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜூன் முதல் வாரத்தில் 31,200 மெட்ரிக் டன் யூரியா உரம் இலங்கைக்கு வரவுள்ளதாகவும், இவை விற்பனைக்காக சந்தைக்கு வரும் போது யூரியா உரத்தின் விலை மேலும் குறைக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.
அதேசமயம், தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு இலவசமாக யூரியா உரத்தை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அரை ஹெக்டேருக்கு குறைவாக நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு ஒரு மூட்டை யூரியா உரம் இலவசமாக வழங்கும் திட்டம் நடைபெறுகிறது.
குறித்த நடவடிக்கை இதுவரை ஏழு மாவட்டங்களில் செயற்படுத்தப்பட்டு வருவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.