சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட தங்கம் மற்றும் ஸ்மார்ட் கைப்பேசிகளுடன் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் சம்பவத்தின் பின்னர் முதன்முறையாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான வாக்கெடுப்பில் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் கலந்துகொண்டதன் பின்னரே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
இதன்போது உரையாற்றிய அவர், ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ இக்கட்டான நிலையில் இருந்த போது எவ்வித ஆதரவையும் வழங்காத காரணத்தினாலேயே ஜனக ரத்நாயக்கவின் பதவி நீக்கம் தொடர்பில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு எதிராக வாக்களித்ததாக தெரிவித்தார்.
மேலும், குறித்த தங்கம் தனக்கு சொந்தமானது அல்ல என்றும் தனது நண்பருக்கு சொந்தமானது என்றும் அவர் தெரிவித்தார்.