கலால் வரியை அதிகரிக்கும் வகையில் நாட்டில் மதுபானசாலைகள் குறைந்தது காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.
இரவு 9 மணிக்கு மதுபானசாலைகள் மூடப்படுவதால் சில பில்லியன் ரூபாய்கள் கலால் வரி இழப்பு ஏற்படுவதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசாங்கம் கலால் வரி விதித்தாலும், இந்த வரியை வசூலிக்க எந்த முறையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
“நாங்கள் கலால் வரி விதிக்கிறோம் ஆனால் வரி வசூலிக்க எந்த முறையும் இல்லை. மதுபானங்களை விற்றால்தான் கலால் வரி வசூலிக்க முடியும்.
மதுபானசாலைகள் மற்றும் உணவகங்கள் குறைந்தது காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்க வேண்டும். இரவு 9 மணிக்கு மதபானசாலைகள் மூடப்படுவதால் பில்லியன் கணக்கான கலால் வரியை இழக்கிறோம்,” என்றும் தெரிவித்தார்.
மதுபானசாலைகள் இரவு 9 மணிக்கு மூடப்பட்டாலும், மதுபானம் வாங்க விரும்பும் மக்களுக்கு இரவு 9 மணிக்குப் பிறகு எப்படி, எங்கு மதுபானங்களை வாங்க முடியும் என்பது தெரியும் என்றும் டயனா கமகே மேலும் தெரிவித்துள்ளார்.