*மன்னிப்பு கோருவதால் மாத்திரம் விசாரணைகளை கைவிட முடியாது*
கிறிஸ்தவ மத போதகர் ஜெரோம் பெர்ணான்டோவின் கருத்து தொடர்பில் மன்னிப்பு கோருவதால் மாத்திரம் விசாரணைகளை கைவிட முடியாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
ஏனைய மதங்கள் தொடர்பில் அவதூறு பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட கிறிஸ்தவ மத போதகர் ஜெரோம் பெர்ணான்டோ தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எவரேனும் குற்றம் செய்துவிட்டு மன்னிப்பு கோரும் போது நாம் முன்னெடுத்த நடவடிக்கைகளை கைவிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் முகமாக குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு அதிகாரிகள் அது தொடர்பில் விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வாறு குற்றம் புரிந்த இலங்கை பிரஜையொரவர் நாட்டிற்கு வருகைத்தருமிடத்து விமான நிலையத்தில் வைத்து அவர்கள் குற்றப்புவனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர்.
குற்றப்புலனாய்வு அதிகாரிகள் பின்னர் விசாரணைகளை முன்னெடுத்து அதற்கான தீர்வினை பெற்றுத்தருவார்கள்.
குறித்த வழக்கை நீதிமன்றத்திற்கு கொண்ட செல்வதா இல்லை அவரை வீட்டிகு அனுப்புவதா என்பது தொடர்பில் அவர்களே முடிவு செய்வார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.