இந்த வருடத்தில் கொவிட் தொற்றாளர்கள் மற்றும் இறப்புகளின் அதிகபட்ச தினசரி எண்ணிக்கை கடந்த சனிக்கிழமை (20) பதிவாகியுள்ளது.
தொற்றுநோயியல் பிரிவின் தினசரி நிலைமை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த தினத்தில் 15 பேருக்கு கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், மூன்று உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, நாட்டில் சிகிச்சை பெறும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை 61 ஆகவும், இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 672,357 ஆகவும் உள்ளது.
மேலும், மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கையை 16,864 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, உலக சுகாதார ஸ்தாபனத்தின் கூற்றுப்படி, கொவிட் தொற்றுநோய் பரவ தொடங்கியதில் இருந்து பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இலங்கை தற்போது 231 நாடுகளில் 80 ஆவது இடத்தில் உள்ளது.