கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியினால் வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான இனப்படுகொலை குறித்த கனேடியப் பிரதமரின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மே 18 ஆம் திகதி கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட அறிக்கையை வெளிவிவகார அமைச்சர் முற்றாகக் கண்டித்து நிராகரித்துள்ளார்.
அரசியல் சார்பு கொண்ட இந்தக் கூற்று சர்ச்சைக்குரிய அறிக்கை என்றும், கனடாவின் உள் அரசியல் நலன்களுக்காக இது வெளியிடப்பட்டது என்றும் அமைச்சர் சப்ரி இங்கு குறிப்பிட்டுள்ளார்.