தேரவாத பௌத்தம் தொடர்பில் ஆராய்வதற்கான பல்கலைக்கழகம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துள்ளார்.
ஜப்பானுக்கான தனது அடுத்த விஜயத்தின் போது இதற்கான உதவிகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.
இன்று அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர்களை சந்தித்த போது அதிபர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டில் ஏற்கனவே பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகமானது தேரவாதத்தின் அடிப்படையின் பௌத்த சாசனங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.