அஸ்வெசுன பயனை மக்களுக்கு வழங்குவதற்காக மத்திய வங்கியில் சமுர்த்தி வங்கி முறையை நுண்நிதி வங்கி அமைப்பாக பதிவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக நிதியமைச்சில் நேற்று (17) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார்.
இதன் கீழ் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள சமுர்த்தி வங்கிகள் உத்தரவாத நடவடிக்கையில் உள்வாங்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோரும் கலந்துகொண்டதாக குறிப்பிடப்படுகின்றது.