கொஸ்லந்த பொலிஸ் பிரிவிலுள்ள பலஹருவ பிரதேசத்தில் கஞ்சா செடிகள் பயிரடப்பட்ட காணி ஒன்றினை நேற்று (17) ஹப்புத்தளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டு 6 அடி கொண்ட 225 கஞ்சா செடிகளை மீட்டு அழித்துள்ளதாக கொஸ்லந்த பொலிஸார் தெரிவித்தனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து சம்பவதினமான நேற்று மாலை குறித்தபிரதேசத்திலுள்ள கஞ்சா செய்கை செய்யப்பட்ட காணியை விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டு அங்கு 15 பேச் நிலப்பரப்பில் பயிரடப்பட்ட 6 அடி உயரம் கொண்ட 225 கஞ்சா செடிகளை பிடிங்கி அழித்ததுடன் அதில் ஒரு பகுதியை சட்டநடவடிக்கைக்காக் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.