நேற்றைய தினத்துடன் (மே 16) ஒப்பிடுகையில் இன்று இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.
மக்கள் வங்கி – நேற்றைய தினம் 302.66 ரூபாவாக காணப்பட்ட டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 300.23 ரூபாவாக குறைந்துள்ளது.
விற்பனை பெறுமதியும் 319.94 ரூபாவிலிருந்து 317.37 ரூபாவாக குறைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கி – நேற்றைய தினம் 303.85 ரூபாவாக காணப்பட்ட டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 300.88 ரூபாவாக குறைந்துள்ளது.
விற்பனை பெறுமதியும் 317 ரூபாவிலிருந்து 314 ரூபாவாக குறைந்துள்ளது.
சம்பத் வங்கி – நேற்றைய தினம் 305 ரூபாவாக காணப்பட்ட டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 303 ரூபாவாக குறைந்துள்ளது.
விற்பனை பெறுமதியும் 317 ரூபாவிலிருந்து 315 ரூபாவாக குறைந்துள்ளது.