இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இதய நோயறிதல் பரிசோதனை கருவிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவற்றை பாவனையிலிருந்து மீளப் பெற சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளதாகவும் மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் ஒன்றியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற மயக்க மருந்துகளின் 100,000 குப்பிகள் அகற்றப்பட்டதாக அதன் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ நேற்று தெரிவித்தார்.
கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில மருந்துகளின் தரத்தில் சிக்கல்கள் ஏற்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.