நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸின் தற்போதைய மாறுபாட்டைக் கண்டறிய அடுத்த வாரம் விசேட பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளன.
அதன்படி, நாட்டில் அண்மைய காலத்தில் கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதானால் மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் கல உயிரியல் பிரிவின் தலைவர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
கொவிட் ஓமிக்ரோன் XBB திரிபு நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதாக கூறப்படுவதுடன், இலங்கையில் தற்போது பரவிவரும் சரியான திரிபினை கண்டறிய பரிசோதனைகள் உதவும் எனவும் அவர் மேலும் கூறினார்.