நேற்றைய தினத்துடன் (மே 09) ஒப்பிடுகையில் இன்று இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.
மக்கள் வங்கி – நேற்றைய தினம் 309.46 ரூபாவாக காணப்பட்ட டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 308.98 ரூபாவாக குறைந்துள்ளது. அதேபோல் விற்பனை பெறுமதியும் 327.13 ரூபாவிலிருந்து 326.62 ரூபாவாக குறைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கி – நேற்றைய தினம் 310.55 ரூபாவாக காணப்பட்ட டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 308.75 ரூபாவாக குறைந்துள்ளது. அதேபோல் விற்பனை பெறுமதியும் 325 ரூபாவிலிருந்து 324 ரூபாவாக குறைந்துள்ளது.
சம்பத் வங்கி – நேற்றைய தினம் 310 ரூபாவாக காணப்பட்ட டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 309 ரூபாவாக குறைந்துள்ளது. எனினும் விற்பனை பெறுமதி மாற்றமடையாமல் 324 ரூபா என்ற நிலையிலேயே உள்ளது.