மட்டு. கரடியனாறு பிரதேசத்தில் இருந்து மட்டக்களப்பு நகருக்குள் சட்டவிரோதமாக முச்சக்கரவண்டி ஒன்றில் மரை இறைச்சியை கடத்திச் சென்ற ஒருவரை நேற்று திங்கட்கிழமை (8) மாலை வலையிறவு பாலத்தில் வைத்து கைது செய்துள்ளதுடன் 30 கிலோ மரை இறைச்சியை மீட்டுள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு புலனாய்வு பிவிரினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து தலைமையக பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவதினமான நேற்று மாலை 6 மணியளவில் வலையிறவு பாலத்தில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன்போது நகரை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் இருந்து 30 கிலோ மரை இறைச்சியை மீட்டதுடன் ஒருவரை கைது செய்ததுள்ளதோடு, கடத்தலுக்கு பாவிக்கப்பட்ட முச்சக்கரவண்டியையும் மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.