ஆசிய நாடுகளில் இருந்து கடத்திக் கொண்டுவரப்பட்ட 1,000 ற்கும் அதிகமானவர்கள் பிலிப்பைன்ஸில் நாட்டில் மீட்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு கடத்தப்பட்டவர்களை வைத்து கடத்தியவர்கள் இணைய மோசடிச் செயல்களில் ஈடுபடுத்தியுள்ளனர்.
இதன்போது, 1,090 பேர் மீட்கப்பட்டதாக தேசிய காவல்துறையின் இணையக் குற்றத் தடுப்புப் பிரிவுக்கான பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.தென்கிழக்கு அசிய பகுதிகளில் இடம்பெற்றுவரும் இணைய மோசடிச் செயல்கள் அண்மைக் காலங்களாக உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகின்றன.
இவ்வாறு கடத்தப்படுவோர் பல வேளைகளில் போலி மின்னிலக்க நாணயங்களில் முதலீடு செய்வதை விளம்பரப்படுத்தும் செயல்களில் ஈடுபடுத்தப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.