தொடர்ச்சியாக இரசாயனங்கள் கிடைக்காமை மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமையினால் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
டெங்கு நுளம்புக் கட்டுப்பாட்டுக்கான புகை விசுறும் செயற்பாடுகள் பிற்பகல் நான்கு மணிக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டும்.
எனினும், சாரதிகளின் மேலதிக நேர கொடுப்பனவுகள் மற்றும் எரிபொருள் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமையினால் புகை விசுறும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தயக்கம் காட்டுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரச நிறுவனங்களில் டெங்கு நுளம்பு ஒழிப்பு குழுக்களை ஸ்தாபிக்குமாறு அரசாங்கம் சுற்றறிக்கைகளை வெளியிட்டிருந்த போதிலும், இதுவரையில் அவ்வாறான குழுக்கள் ஸ்தாபிக்கப்படவில்லை என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
தற்போது நிலவும் மழை நிலைமையை அடுத்து, நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்து நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.