க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் தாம் ஈடுபட தயார் என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
MAY (04) பிற்பகல் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலை அடுத்து, குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
*உயர்தரப் பரீட்சை தமிழ் மொழி விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்.*
உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் (முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்து சமயம், கிறிஸ்தவம், இந்து நாகரிகம், பரதநாட்டியம், கீழைத்தேய சங்கீதம், கர்நாடக சங்கீதம், மேற்கத்திய சங்கீதம், சித்திரம், நாடகமும் அரங்கியலும் மற்றும் ஹிந்தி ஆகிய பாடங்களுக்கான பணிகளே தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எச்.ஜே.எம்.சீ. அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், கொழும்பு, மட்டக்களப்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் குருநாகல் ஆகிய நகரங்களை அண்மித்து காணப்படும் விடைத்தால் திருத்தும் நிலையங்களில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாவும் பரீட்சைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் சிங்களம் மற்றும் ஆங்கில மொழி மூலம் பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் பணிகள் இன்னும் ஆரம்பமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.. இதற்கான விண்ணப்பங்கள் போதிய அளவில் கிடைக்க பெற்றுள்ள நிலையில் அந்தப் பணிகளில் மிக விரைவில் ஆரம்பிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது…
உயர்தர பரீட்சையின் முடிவுகள் வெளியாவதில் இன்னும் சில கால தாமதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.. குறித்த பெறுபேறுகள் ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை மாதம் அளவில் வெளியிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.