வெசாக் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் அன்னதானங்களுக்கான பதிவுகள் ஏற்கனவே அந்தந்த பகுதியில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
அந்த வகையான அன்னதானம் (தன்செல்) எத்தனை நாட்கள் நடத்தப்படும், நடைபெறும் இடங்கள், சுற்றுச்சூழலின் தன்மை போன்றவற்றைக் குறிப்பிடும் கடிதத்தை வழங்கினால் அப்பகுதியில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் பதிவினை பெற்றுக்கொள்ள முடியும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களில் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் மற்றும் சமைத்த உணவுகள் என்பனவற்றை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் அன்னதானம் (தன்செல்) நடைபெறுவதற்கு முன்னர் இடம்பெறும் என சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.