எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் இலங்கைக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் தீர்வையற்ற வரி (Duty free) சலுகையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டார்.
சுற்றறிக்கையின்படி, வங்கி முறையின் ஊடாக சட்டப்பூர்வமாக இலங்கைக்கு பணம் அனுப்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகரிக்கப்பட்ட தீர்வையற்ற வரி நிவாரணம் பெற தகுதியுடையவர்கள்.
இதற்காக கடந்த ஆண்டு மே மாதம் முதல் திகதியில் இருந்து வங்கி முறை மூலம் அனுப்பப்பட்ட பணத்தின் அளவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு ஐந்து வகைகளின் கீழ் இந்த நிவாரணம் வழங்கப்படும்.
2400 – 4799 அமெரிக்க டொலர்களுக்கு இடைப்பட்ட தொகையை அனுப்பிய தொழிலாளர்கள் 600 டொலர் நிவாரணம் பெறலாம்.
4800 – 7199 அமெரிக்க டொலர்களுக்கு இடைப்பட்ட தொகையை அனுப்பிய தொழிலாளர்கள் 960 டொலர் நிவாரணம் பெறலாம்.
USD 7,200 – 11,999 க்கு இடையில் அனுப்பும் தொழிலாளர்களுக்கு USD 1,440 கூடுதல் வரிச் சலுகை கிடைக்கும்.
USD 12,000 – 23,999 க்கு இடையில் அனுப்பிய வெளிநாட்டு தொழிலாளர்கள் USD 2,400 சலுகை பெறலாம்.
US$24,000 அல்லது அதற்கு மேல் அனுப்பிய தொழிலாளர்கள் US$4,800 கூடுதல் வரிச் சலுகையைப் பெறலாம்.