வடக்கு – கிழக்கில் நாளை முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தச் சங்கத்தின் யாழ். மாவட்டச் செயலர் ஜெயராஜ் குலேந்திர வொல்வின் தெரிவித்ததாவது:-
கடந்த காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் விளைவுகளை நாம் முழுமையாக அனுபவித்துள்ளோம். இந்த நிலையில் புதிதாகக் கொண்டுவரப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தால் மக்கள் எதிர்காலத்தில் பாதிக்கப்படுவார்கள்.
வடக்கு – கிழக்கில் உள்ள பொது அமைப்புக்கள் சார்பாக ஆதரவை வழங்குவதோடு ஒவ்வொரு ஆசிரியரும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கி வலுச்சேர்க்குமாறு கோருகின்றோம் என்றார்.