இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை மேல் மாகாணத்துக்கு மாத்திரமே விநியோகம் செய்வதற்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதாக அரச வணிக பல்நோக்கு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
ஏனைய மாகாணங்களில் உள்ள பாரியளவான வெதுப்பக மற்றும் உணவகங்களில் இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு பாரிய கேள்வி உள்ளதாக அதன் தலைவர் ஆசிர வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
தேவைக்கு ஏற்ற வகையில் விநியோகத்தை வழங்க முடியும் என்றாலும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதி கிடைக்காமை பிரச்சினையாக உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.