மேல் மாகாணம் உட்பட நாட்டின் சில பகுதிகளில் இன்று வெப்பநிலை 39°C – 45°C வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், வடமேல், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (21) வெப்பமான காலநிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிக வெப்பம் காரணமாக சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு பல வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளனர்.
வீடுகளில் தங்கியிருக்கும் முதியவர்கள் மற்றும் நோயுற்றவர்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும், சிறு குழந்தைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்ல வேண்டாம் எனவும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, வெப்பநிலை அதிகரித்திருக்கும் போது நீங்கள் வெளியில் வேலை செய்யும் நபராக இருந்தால், நீங்கள் கடுமையான நடவடிக்கைகளை மட்டுப்படுத்த வேண்டும்.
மேலும், வெளியில் வேலை செய்பவர்கள் நிழலில் தங்கி போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நீங்கள் பணியிடத்தில் இருந்தால், நிறைய தண்ணீர் குடித்துவிட்டு முடிந்தவரை நிழலில் ஓய்வெடுகுமாறு அறிவுறுத்தியுள்ளது.