நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளுக்கு எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 1320 புதிய வைத்தியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
குறிப்பாக பெருமளவான நியமனங்கள் பின்தங்கிய பிரதேசங்களில் அமைந்துள்ள வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
தற்போது நாட்டில் சுமார் 19 000 வைத்தியர்கள் காணப்படுகின்றனர். புதிய நியமனங்களுடன் இந்த எண்ணிக்கை 20 000ஆக உயர்வடையக் கூடும்.
கடந்த காலங்களில் நாட்டில் பொருளாதார பிரச்சினைகள் இருந்த போதிலும், ஒரே நேரத்தில் அதிகளவான வைத்தியர்களை நியமிக்க முடியும் என்பது,
இலவச சுகாதார சேவையில் பாரிய சாதனை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஆண்டுதோறும் மருத்துவக் கல்விக்காக இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 1500 முதல் 1800 வரை காணப்படுகிறது.
இதனை 5000 வரை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதன் மூலம் இனிவரும் காலங்களில் சுகாதாரத்துறையில் பாரிய வளர்ச்சி எதிர்பார்க் கப்படுவதாகவும் அமைச்சர் கெஹெலிய தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 25ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள் நாட்டின் சுகாதாரத் துறையில் முதுநிலைப் பட்டதாரிகளாக இணைந்து கொள்ளவுள்ளனர்.