சூரியனின் கதிரியக்க வீச்சு (Radiation) காரணமாகவே இலங்கையில் வெப்ப அலையுடனான வானிலை நிலவுவதாக என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சூரியனில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சும், வளிமண்டலத்தில் குறைந்த மேகங்கள் மற்றும் குறைந்தளவான காற்றும் இலங்கையின் தற்போதைய வானிலைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த வானிலையானது மே மாத நடுப்பகுதி வரையில் தொடரும் எனவும் எதிர்வுகூரப்பட்டுள்ளது.
இந்த வானிலையானது வருடத்தின் இந்த காலப்பகுதிக்கு பொதுவானது எனவும், ஆனால் இலங்கையின் நிலைமைக்கும், மும்பையில் 11 பேர் உயிரிழப்புக்கு காரணாக அமைந்த அனல் காற்றுக்கும் தொடர்பில்லை எனவும், திணைக்களத்தின் பேச்சாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த வெயிலின் போது பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து பாதுகாப்பாக இருப்பது அவசியம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.