கொழும்பு தேசிய வைத்தியசாலை, மஹரகம வைத்தியசாலை, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை மற்றும் ஏனைய பிரதான வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் அனைத்து அவசர சத்திர சிகிச்சைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.