முன்னாள் நிதி அமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரி புதிய அரசாங்கத்தில் நிதியமைச்சர் பதவியை ஏற்கும் வாய்ப்பை நிராகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே சப்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதாகவும் ஆனால் நிதியமைச்சர் பதவியை ஏற்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஏப்ரல் மாதம், முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.