அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உட்பட 16 பேருக்கு தடைவிதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பில் இன்று பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ள நிலையில் கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்படி இன்று காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், நிதியமைச்சு மற்றும் காலிமுகத்திடல் ஆகிய பகுதிகளுக்குள் பிரவேசிப்பதற்கு தடைவிதித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்
மேலும் போராட்டக்காரர்கள் கொழும்பு நகரின் பிரதான வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவதனை தவிர்க்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழகங்க மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உட்பட 16 மாணவர் சங்கங்களின் செயற்பாட்டாளர்களுக்கு குறித்த உத்தரவு பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பில் இன்று பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது
7 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்
இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கொழும்பு நகருக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்
இதேவேளை தொழில்வல்லுனர்களின் தொழிற்சங்க சம்மேளனத்தினர் மற்றும் துறைமுகம், எண்ணெய், நீர் மின்சாரம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கிடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது
துறைமுகம், எண்ணெய், நீர் மின்சாரம் உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது