புகையிரதம் தடம் புரண்டமையால் பாதிப்படைந்திருந்த பிரதான புகையிரத மார்க்கத்தில் புகையிரத போக்குவரத்து இன்று முற்பகல் வழமைக்கு கொண்டு வரப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
புகையிரதம் ஒன்று தடம்புரண்டமையை அடுத்து பிரதான மார்க்கத்தில் சேவை, றம்புக்கணை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.மலையகத்திற்கான புகையிரத மார்க்கத்தினை வழமைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக புகையிரத திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் 102 குறுந்தூர புகையிரத சேவைகளும் 6 நெடுந்தூர புகையிரத சேவைகளும் தற்போது முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.