வெல்லவாய பிரதேசத்தில் பதிவான சிறு நில அதிர்வுகள் தொடர்பான கள ஆய்வுகள் நேற்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் அதிகாரிகளால் இந்த ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன
இந்த நிலையில், நில அதிர்வுகள் தொடர்பான ஆய்வறிக்கை இன்று (13) வெளியிடப்படும் என புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.