காவல் துறையினர் தங்கள் பணியைச் சரியாகச் செய்யவில்லை எனக் கூறி எப்பாவல பொலிஸ் நிலையம் முன்பாக ஒருவர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார்.
2008ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் எப்பாவல பொலிஸ் நிலையம் தனது கடமையை சரிவர செய்யவில்லை எனவும், அதற்கு நீதி கிடைக்கவில்லை என்றும் தெரிவித்து இன்று (10) காலை எப்பாவல பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒருவர் சாகும் வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.
எப்பாவல பொலிஸ் நிலையத்திற்கு பல தடவைகள் சென்றும் தமது முறைப்பாட்டுக்கு நீதி கிடைக்கவில்லை எனவும் பொலிஸ் நிலைய அதிகாரிகள் தம்மை திட்டி விரட்டியடித்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்