கொழும்பில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த காத்தான்குடியைச் சேர்ந்த வை.பி.. அப்துல் ரஊப் (வயது 52) இன்று (05) ஞாயிற்றுக்கிழமை காலை கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
இவர், 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேக நபராக 2019 மே மாதம் 5ம் திகதி கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்ததாக தெரியவருகிறது
இவர் இருதய நோயினால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் இரண்டு முறை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தாகவும் தெரிய வருகிறது
புதிய காத்தான்குடி விடுதி வீதியைச் சேர்ந்த இவர், நான்கு பிள்ளைகளின் தந்தை ஆவார்.