2023 மற்றும் 24 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.
அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையிலான வளர்ச்சியை உருவாக்கும் வகையில் வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சுதந்திரத்தின் 75வது ஆண்டில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் இந்தியாவின் பொருளாதாரத்தை உலகம் அங்கீகரித்துள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் தாக்கல் செய்யும் இறுதி வரவு செலவுத்திட்டம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.